2023 ஆண்டு முதல் நாள்
வேளாண்மை எனக்கு மிகவும் பிடித்த ஒன்று,. அதற்கு காரணமாக இருந்த எனது தந்தை திரு. S.V.ராமமூர்த்தி அவர்கள், அவர்களின் அனுபவம், ஆளுமை, ஈடுபாடு, தொலைநோக்குப்பார்வை போன்ற நினைவுகள் என்னை ஆட்கொண்டிருந்தது,
எனது தந்தையுடன் கடந்த 1988ம் ஆண்டுமுதல் வேளாண்மை பயிண்று வருகிறேன், இருப்பினும் இதனை செய்ய எனது வாழ்க்கையில் கடந்த வருடம் மிக கடினமானதாக இருந்ததாக உணர்கிறேன்.
எங்கள் நிலத்தில் கடந்த வருடம் மற்றும் நடப்பு பருவத்தில் நண்டு, நத்தை, பூச்சிகள் பறவைகள் போன்ற ஜீவராசிகளாள் பெரிய சேதம் ஏற்பட்டுள்ளது, இது எனது தனிப்பட்ட முதல் வேளாண் பணியில் பெற்ற படிபிணையாக அமைப்தது.
அதற்கான காரணங்களை தேடியதில் எனக்கு புரிந்ததை பகிர்கிறேன்.
வேளாண்மை செய்வது ஒரு கலை அது ஒரு தொழில் அல்ல.
டயம் டேபில் விவசாயம், வாட்ஸப் விவசாயம், போன்ற ஊடக தொழில்நுட்பங்கள் பயன்தறாது.
இயற்கை மற்றும் காலத்தை தவிர்த்து வேளாண் செயவது விரையத்தை அளிக்கும்.
அன்றாடம் வயல்வெளி பார்வையுடுதல் மிக முக்கியம்
குறைந்த பட்ச மகசூலை மதிப்பிட்டு செலவு செய்தல் நல்லது
சூழ்நிலைகளை சாதகமாக்கிக்கொள்வது, நேரத்தில் செய்து முடிப்பது அவசியம்
மேற்காணும் வரிகள் பார்வைக்கு எளிமையாக இருந்தது. செயல்பாட்டில் வழி தெரியாமல் போனது. அப்பொழுதுதான் எனது தந்தையின் ஆற்றலை முழுமையாக உணர்தேன்.
இன்றய நிலையில் வேளாண்மை செய்வது என்பது கடினமாக உள்ளது. அதற்கு பல காரணங்கள் இருதாலும், அதனை உடைக்க ஒர் சக்கரவியூகம் செய்யவேண்டியுள்ளது. இருப்பினும் இயற்கையின் வழியே முடிவானதாக உள்ளது.
இதனை வெற்றி அடைய அனுபவம் மற்றும் இயற்கையின் விதி கொண்ட மரபு சார்ந்த யுக்தியை கடந்த காலங்களில் எங்கள் தந்தை எவ்வாறு கையாண்டார் என்பதை பின்வரும் பதிவுகளில் பார்ப்போம்.