பாரம்பரிய நெல் விதைகளை தேர்வு செய்யும் முறை

SVR Organic Seeds - Pure line selection
Rice Seed selection using Pure Line method

விதைத் தேர்வு

  •  விவசாயிகள் தங்களின் சொந்த விதைகளை தேர்வு செய்து பயன்படுத்துவது தான் சிறந்தது.
  •   தேர்வு செய்யப்படும் விதைகளை நன்று முதிர்ந்த விதைகளாக இருக்க வேண்டும்
  •   விதைகளை தேர்வு செய்யும் போது எந்த நெல் தாவரத்தில் அதிகமான தூர்கள் உள்ளனவோ அவற்றில் இருந்து விதைகளை தேர்வு செய்ய வேண்டும்.
  •   விதைகள் ஒத்தமாதிரியாக கலப்பு இல்லாமல் இருக்க வேண்டும்.
  •   விதைகள் ஒரே மாதிரி அளவாக இருக்க வேண்டும்.
  •   அப்படி தேர்வு செய்யப்படும் தாவரம் பூச்சி மற்றும் நோய் தாக்குதலால் பாதிக்கப்பட்டிருக்கக் கூடாது.
  •   அதிக நெல்மணிகள் கொண்ட கதிர்களில் இருந்து விதைகளை தேர்வு செய்ய வேண்டும்.
  •   விதைகளை கையால் தனியாக பிரித்து எடுக்க வேண்டும்.
  •   ஒரே மாதிரியான விதைகளை பெற சல்லடையை கொண்டு சலித்து எடுத்துக் கொள்ளவது மிகவும் சிறந்தது.
  •   விதைகள் முறைப்படி காயவைக்கப்பட்டு பின் அவற்றை சேமித்து வைத்துக் கொள்ளவேண்டும்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *